மணல் சிற்பத்தில் சிறந்து விளங்கும் கீழக்கரை வடக்குத் தெரு மாணவன்..

கீழக்கரை வடக்குத் தெரு பசீர் மரைக்காயர் அவர்களின் மகன் ஹக்பில் மரைக்காயர். இவர் பியர்ல் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தனித் திறமை மண் சிற்பம் வரைவதாகும்.

இன்று இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாம் நினைவு நாள் நிகழ்ச்சி தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மற்றும் பியர்ல் பள்ளி வளாகத்தில் கலாம் இன்டர்நேசனல் ஃபவுண்டேஷன் சார்பாக பல சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளாக நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பாக அப்துல் கலாமின் தனித்துவத்தை விளக்கும் விதமாக ஹக்பில் மரைக்காயர், கலாமின் உருவம் மற்றும் அவர் ஏவுகணையில் ஆற்றிய பணிகளை விளக்கும் விதமாக ஏவுகணையையும் மணலில் கண்ணைக் கவரும் விதமாக சிற்பமாக வரைந்து அனைவரின் பாராட்டையும் சிறப்பு பரிசையும் வென்றார்.

இம்மாணவர் கடந்த ஆண்டு முகம்மது சதக் கல்லூரி சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக அதியமான் கடற்கரையில் நடைபெற்ற போட்டியில் டால்ஃபின் குடும்பத்தை மணல் சிற்பமாக வரைந்து கடலோர காவல்படை அதிகாரியிடம் இருந்து முதல் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர் இன்னும் பல பரிசுகள் பெற்று உலகளவில் சிறக்க கீழைநியூஸ் வோர்ல்ட் நிர்வாகம் வாழத்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “மணல் சிற்பத்தில் சிறந்து விளங்கும் கீழக்கரை வடக்குத் தெரு மாணவன்..

  1. அன்புடன் கீழை நியூஸ் பதிப்பாளருக்கு,
    செய்தியின் Link வாட்ஸ்அப் குழுமத்தில் Broadcast செய்து கொண்டிருந்தை நிறுத்தி விட்டார்களா?
    இப்போதெல்லாம் வாட்ஸ்அப் ல வருவதில்லை, வாட்ஸ்அப்ல லிங்க் வருவது FB பயன்படுத்தாதவர்களுக்கு கீழை செய்திகளை அறிய உதவியாக இருந்தது. ஆவண செய்யவும்.

    1. உங்கள் அன்பான பதிவுக்கு நன்றி.. மீண்டும் தொடங்க முயற்சிக்கிறோம்.. சில நண்பர்கள் பல குழுமங்களில் இருந்து எங்களுக்கு வருகிறது.. ஆகையால் தவிர்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன் வைத்தார்கள் அந்த அடிப்படையிலேயே நிறுத்தினோம்.. மீண்டும் விருப்பம் உள்ளவர்களுக்கு அனுப்ப முயற்சி செய்கிறோம்…

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!