பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை.!

பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை தலைமை குருசாமி மோகன் சாமி Another வழங்கினார்!

பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி நல் மதிப்பெண் பெறுவதற்காக10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் 

நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று காலை 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று அனைவரும் தேர்ச்சி பெற சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரெகுநாதபுரம் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி 10வது 11வது மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா முதல்வர் பிரீத்தா தலைமையில் மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையை ஸ்ரீ வல்லபை ஆலய குருநாதர் மோகன் சாமி நடத்தி அருளாசி வழங்கினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!