கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை .!

 பக்ரீத் பண்டிகை தியாகப் திருநாள் கொண்டாட்டம். ! இஸ்லாமியர்கள் இறைவனை வணங்கி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.!!

ஹஜ் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும்

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து  

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்பட்டு அனைத்து இஸ்லாமியர்களும் புத்தாண்டு அணிந்து திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் இன்று காலையிலிருந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அனைத்து மக்களும் உலக மக்கள் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஆடு மாடு ஒட்டகம் போன்றவைகளை இறைவனுக்காக பலியிட்டு இறைச்சிகளை மூன்றாக பங்கிட்டு உறவினர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அண்டை வீட்டார்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.  

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!