மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (08.02.20180 காலை 10 மணியளவில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை சந்த்தித்து தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்தும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நம் பகுதி மக்கள் இந்த நல்ல நிகழ்ச்சியினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.

  1. மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த இந்த பதிவை மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி வெளியிட்ட கீழை நியூஸ் இணையதள பக்கதிற்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!