முடங்கியது தேர்தல் ஆணைய இணையதளம்.!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஒரு நாள் காத்திருந்து நாளை முதல் எளிதாக அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!