கவிஞர் கப்ளி சேட் தெளிவு படுத்தும்; SIR (special intensive revision) ஐயா…SIR ஒரு நிமிஷம்..!

கவிஞர் கப்ளி சேட் தெளிவு படுத்தும்;

 SIR (Special Intensive Revision) ஐயா…(SIR) ஒரு நிமிஷம்..!

SIR ஒன்றும் புதிதல்ல ஆனாலும் இதன் ஆபத்துகளை புரிந்து கொண்டால், இதை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று முடிவு செய்து அவர்களை எளிதாக புறக்கணித்து விடலாம்.

இதை ஆதரிக்கும் கட்சிகளை விரட்டி அடிக்க இது ஒன்றே போதுமானது.

SSR (Special summary Revision) என்ற ஒரு நடைமுறை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் 18 வயது பூர்த்தியானவரை இணைக்க, இறந்தவர்களை நீக்க, முகவரி மாற்றம் மற்றும் ஏதும் குளறுபடிகள் இருந்தால் சரிசெய்ய, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு சாதாரண நடைமுறை.

SIR என்பது புதிதாக வாக்காளர் பட்டியலையே தயாரிப்பதாகும்.

பழைய வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணையம் freeze செய்து விட்டது அதனை பயன்படுத்த முடியாது.

இப்போது தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலே இனி தொடரும். இதில் 2002மற்றும் 2005 வாக்காளர் பட்டியலை ஒரு அடையாளமாக‌ (Bench mark) ஆக‌ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2002 ஆம்ஆண்டு 197தொகுதிகளுக்கும், 37 தொகுதிகளுக்கும் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்) மாவட்டங்கள் சுருக்கமாக சென்னை என்று வைத்துக் கொள்ளலாம் 2005 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர்‌ பட்டியலை அடையாளமாக அறிவித்துள்ளது.

2002-2005 வாக்காளர் பட்டியலில் வாக்காளராக இடம்பெற்று இருந்தால் அதன் விபரங்கள், அதில் இடம்பெற்றுள்ள உறவினர் விபரங்களை புதிய படிவத்தில் பதிய வேண்டும்.

இதற்கு ஆவணம் கொடுக்க தேவையில்லை. புதிய passport size போட்டோ ஒன்றை ஒட்டி வாக்காளரோ அல்லது அவரின் உறவினரோ கையெழுத்து போட்டு கொடுத்துவிடலாம்.

ஒருவேளை 2002-2005 வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம் பெறவில்லை எனில், அவர்களின் ரத்த உறவுகளின் பெயர்கள் இடம் பெற்று இருந்தால் அதனை படிவத்தில் பதிய வேண்டும்.

இதற்கு துணையாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிற ஆவணங்களில் ஏதோ ஒன்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

பிறப்பு தேதியை வைத்து தந்தை, தந்தை- தாய் என ஒருவருடையதோ இருவருடையதோ ஆவணங்களை இணைக்க வேண்டும்.

2002-2005 விபரங்களை பதியும்போது உயிரோடு இருக்கும் உறவினர்களை பதியுங்கள் அதுவே நல்லது. இறந்து விட்டவர்களை பதிந்தால் Death certificate கேட்டால் சிரமமாக இருக்கும்.

புதியவர்களை சேர்க்க ஃபார்ம் -6 நீக்க ஃபார்ம்-7, திருத்தங்களுக்கு ஃபார்ம் -8 வாங்கி எழுதிக்கொடுத்தா‌ முடுஞ்சு போச்சுன்னுநினைக்க முடியாது கதை இனிமேல்தான்..!

இதுக்கு போயா இவ்வளவு Buildup கொடுத்தாங்க ன்னு நினைக்கிறீங்களா?

BLO மட்டத்தில் (பெரும்பாலும் தெரிந்தவர்கள்) பிரச்சினைகள் இல்லை. அவர்களே உங்களுக்கு போன் செய்து உங்களிடம் படிவங்களை நிரப்பி வாங்கி கொள்ளலாம்.

அப்புறம் என்ன? படிவம் கொடுத்தாச்சு முடிஞ்சுச்சு வேலை!

இல்லை.. இல்லை.. இனிமேல்தான் இருக்கிறது Twist.

இந்த படிவம் எல்லாம் ERO (Electoral Registration officer)தேர்தல் பதிவு அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்தான் படிவங்களை கணணியில் upload செய்வார். இவர் நினைத்த படிவங்களை upload செய்யலாம் அல்லது குப்பைக்கூடையிலும் போடலாம்.

பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லை எனில் DEO (District Electoral officer )இடம்‌ உங்கள் முதல் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இங்கும் வேலை ஆகவில்லை எனில், CEO (Chief Electoral officer) இடம் இரண்டாவது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

குறிப்பாக புதிதாக சேர்க்கப்படுபவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் வராது.

இறுதி வாக்காளர் பட்டியலிலேயே வரும்.அதில் விடுபட்டுவிட்டால் அவர்களின் மொழியில் நீங்கள் ஊடுருவல்காரர்கள்.

அதன்பிறகு நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க முடியும் என்ற நிச்சயமில்லை.

அடுத்த Twist.

அவர்கள் கேட்கும் ஆதாரங்கள் எதுவுமே எளிய மக்களிடம் புழக்கத்தில் இல்லாதது. சாதாரண மக்கள் பயன்படுத்தும்  ரேஷன் கார்டு,ஆதார் கார்டு-(அது எந்த அளவு ஏற்றுக் கொள்ளபடும் என்று தெரியவில்லை.) இவைகளை விட்டு விட்டு எதை எதையோ ஆதாரமாக கேட்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் எளிய மக்கள் அவர்களுக்கு வாக்களிக்காத மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

சாதாரண எளிய மக்கள் விடுபட்டால் இணைக்க அலைய முடியமா?

இவைகளை வைத்திருக்கிற மேல்மட்ட மக்களுக்கு எளிது.

இதில் அவரது ஆதரவாளர்களை DEO மூலமாக‌ பலவகைகளில் பல போலி முகவரிகளில்,பிறரின் முகவரிகளில், பிறரின் புகைப்படங்களை, வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்.

இதுவே கர்நாடக, மஹாராஷ்டிரா, ஹரியானா என்று பல மாநிலங்களில் முறைகேடாக நடந்துள்ளது.

கர்நாடகாவில் இதனை வெளிப்படுத்திய ராகுல் காந்தி அவர்கள் இப்போது ஹரியானாவில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இதில் இன்னொரு twist என்னவெனில் நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்தை நேரடியாக கேள்வி கேட்டு குற்றம் சுமத்த முடியாது மற்றும் தேர்தல் ஆணையர்களை தண்டிக்கவும் முடியாது என்று சட்டத்தை திருத்தி விட்டார்கள்.

மக்களால் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட இவர்கள் இதுபோன்ற பித்தலாட்டங்கள் செய்தே வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகளே! இப்போது மனசாட்சியோடு சொல்லுங்கள்.

மக்களின் வாக்குரிமையை பறித்து மக்களை ஊடுறுவல்காரர்களாக மாற்றத்துடிக்கும் இந்த SIR நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அப்படி ஒரு வரலாற்று தவறை நீங்கள் செய்தால் தமிழக‌ மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க‌ மாட்டார்கள்.

உங்களின் அரசியல் லாபங்களுக்காக மக்களை அடகு வைத்தால் அவைகளை மக்கள் புரிந்து கொள்ளும் போது துறத்தி துறத்தி அடிப்பார்கள் என்பது நிதர்சனம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!