சுரண்டையில் இரண்டாம் நிலை காவலர் சிறப்பு வகுப்புகள்; காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் துவக்கி வைத்தனர்..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள சாந்தி ஐஏஎஸ் அகாடமியில் கல்லூரி மாணவர்களுக்கான மாலை நேர இரண்டாம் நிலை காவலர் சிறப்பு வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழாவில் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் இரா. சின்னத்தாய் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் டேவிஸ், பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணகுமார், தெற்கு ரயில்வே செல்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஊக்க உரையாற்றி சிறப்பித்து புதிய வகுப்புகளை துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பு தினசரி மாலை 4 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறுகிறது. சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு 9025070679 இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!