ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.!

கள்ளக்குறிச்சி நகர ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் கோமுகி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தும் , புது வஸ்திரம் சாற்றியும் , பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். ஆரிய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தலைவர் ஜெகந்நாதன் , செயலாளர் தாமோதரன் , பொருளாளர் ராகவன் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகள் , மற்றும் சங்க ஆலோசகர்கள் இன்னர் வீல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு, மேள தாளம் முழங்க அம்மனை வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!