சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடை பெற்றது.
வைகாசி மாதத்தில் வரும் வளர் பிறை பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் மகிழ்ச்சி , செழிப்பும் பெருகும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் இன்று வைகாச மாத வளர் பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பல்வேறு மஞ்சள், சந்தனம்,பால், தயிர், தேன்,பஞ்சாமிர்தம் இளநீர்,பன்னீர் நெய் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அலங்கரிப்பட்ட உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி , சந்தோஷம் நன்மைகள் பெற வேண்டி தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேவகோட்டை நிருபர்.மன்சூர்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









