பாடகர் எஸ்,பி, பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல் நலம்
குணமடைந்து திரும்ப இன்று மாலை 6 மணிக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என பிரபல இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியிலுள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீமாயூரநாதசுவாமி திருக்கோவில் முன்புறம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மேடை இசை நிகழ்ச்சி கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாக உடல் நலம் பெற வேண்டும் என சுவாமி வழிபாடு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.