தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கூட்டம் முறைப்படி நடத்த வேண்டும் என்றும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாண்டியராஜா கூறுகையில், “ரயில்வே துறைக்கான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பயணிகளுக்கான தேவைகள் குறித்து விவாதிப்பதற்கான மிக முக்கியமான குழுவாக மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு கோட்டங்களிலும் ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டங்கள் சரியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோட்டங்கள் அனைத்தும் அடங்கிய தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழுவிற்கு ஒரு கூட்டம் கூட இதுநாள் வரை நடத்தப்படவில்லை. எங்கள் உறுப்பினர்களின் பதவி காலமும் இப்போது நிறைவு பெற்று இருப்பது வருத்தமளிக்கிறது. வருடத்திற்கு 3 ஆலோசனைக்குழு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது விதி. இனி வரும் காலங்களில் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விஷயத்தில் தலையிட்டு தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழுவை முறையாக வழி நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.