தென் மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மார்ச் 11 ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். மேலும் விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

மார்ச் 12 ஆம் தேதி நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரை மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடைப் பணிகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் முடித்து கொள்ளவும். மேலும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும்.

 

குற்றாலம் அருவிகளை பொருத்தவரை கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் தொடர்ந்து நீர்வரத்து இருந்து கொண்டிருக்கும். மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் மழை பெய்யும் சூழல் இருப்பதால் 11,12 ஆகிய தேதிகளில் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மார்ச் 11 ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்யும் மழையின் போது இடி மின்னல் வலுவாக இருக்கும் தரைக்காற்றும் பலமாக வீசும். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!