சோழ வந்தான் அருகே செல் போன் திருடிய மூவர் கைது; போலீசார் விசாரணை.

சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது; போலீசார் விசாரணை.

சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசீர்பிரபாகர் மோட்டர் சைக்கிளை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ஆசீர் பிரபாகர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேலக்கால் கணவாய் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை திருப்பி தப்பி ஓட முயன்றனர். இவர்களை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதில் செக்கானூரணி அருகே கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் அற்புதராஜ், பூமிராஜா மகன் இன்பராஜ், சுரேஷ் மகன் முத்துக்குமார் என்று தெரிய வந்தது. மேலும் விசாரணை செய்ததில் நேற்று இரவு ஆசிரியரிடம் வழிப்பறி செய்து செல்போனை பறித்து சென்றவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஆசிரியரிடம் வழிப்பறி செய்த செல்போன் மற்றும் அதற்குப் பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். இதன் பேரில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!