அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு..
சோழவந்தானில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியாத நிலையில் இருந்ததாகவும் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக 37,000 கோடி கேட்டும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற முடியாத நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று எம்பிக்களை அனுப்பினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் அதிமுக கடந்த காலங்களில் காவேரி பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிய சம்பவங்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறது ஆகையால் அதனை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மு காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் முருகேசன், அசோக், அழகுராஜா, குமார், நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், மகளிர் அணி லட்சுமி மாவட்ட மாநில நிர்வாகிகள் பஞ்சவர்ணம், திருப்பதி, வெற்றிவேல் துரை, தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி, தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா, ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி தண்டபாணி, கேபிள் மணி, தியாகு பெருமாள், மன்னாடிமங்கலம், ராஜபாண்டி, மருது, சேது, ஜூஸ் கடை கென்னடி, துரை, புஷ்பம், பேட்டை மாரி, மணிகண்டன், எஸ்பி மணி, வாவிடமருதூர் ஆர் பி குமார், கேட்டுக்கடை முரளி, அவைத்தலைவர் ராமசாமி, சந்தனத்துறை மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









