மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை..
மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 28 இவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தேனூர் டாஸ்மாக் அருகேமோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார் இவரை பின்தொடர்ந்த மர்மக்கும்பல் காரில் வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது இப்போது பிரபல ரபடியான பிரசாந்த்தப்பி ஓட அருகில் உள்ள தோட்டத்தில் ஓடி உள்ளார் இவரை விரட்டி சென்ற மர்ம கும்பல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் இவருடன் வந்த ராகுல் மோட்டர் சைக்கிள் தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர் சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் பட்டப் பகலில் அதுவும் டாஸ்மாக் கடை எதிரில் பிரபலரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









