இராமநாதபுரம் மாவட்டம்ரூபவ் கடலாடி வட்டம்ரூபவ் வாலிநோக்கம் அருகேயுள்ள மாரியூர் கிராமத்தில் (16.08.2018) அன்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனம் (TIDEL) சார்பாக 63.5 கோடி மதிப்பில் சூரியஒளி மின் உற்பத்தி பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன், டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன், மடைன் எலக்ட்ரிகல் நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீராம்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வின் பிறகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது, ‘ தமிழ்நாடு அரசு, புதுப்பிக்கத்தக்க சக்தியின் (RENEWABLE ENERGY) மூலம் மின்உற்பத்தியினை அதிகரித்திடும் நோக்கில் சூரியஒளி மின்சார உற்பத்தியினை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு நிறுவனம் (TIDCO ) மற்றும் எல்காட் நிறுவனம் சார்பாக ரூ.63.5 கோடி மதிப்பில் மெரைன் எலக்ட்ரிகல் என்ற நிறுவனத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டம்ரூபவ் கடலாடி வட்டத்தில் உள்ள மாரியூர் கிராமத்தில் புதிதாக 50 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
குறிப்பாக 36 மெகாவாட் அளவிற்கு முழுமையாக சூரியஒளி மூலமாகவும் 12 மெகாவாட் அளவிற்கு பயோமாஸ் (BIOMASS ) முறையிலும், 6 மெகாவாட் அளவிற்கு சூரியஒளி – நீராவி முறையிலும் என மொத்தம் 50 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளன. இம்மின்உற்பத்தி பூங்கா அமைப் பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மொத்தம் 268 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் முதற்கட்டமாக 10 மெகா வாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்வதற்காக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மின்உற்பத்திக்கான பேனல்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளன. பணிகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் முதற்கட்ட 10 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட பணிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்ட பின்பு 50 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் தெரிவித்தார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










