இராமேஸ்வரத்தில் வளைய சூரிய கிரகணம் வானியல் நிகழ்வு:..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வளைய சூரிய கிரகணம் மக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 8.10 மணிக்கு ஆரபித்த சூரிய கிரகணம் 11.10 மணி வரை நீடித்தது. சரியாக 8.10 தொடங்கிய சூரியக் கிரகணம் படிப் படியாக சந்திரன் சூரியனை மறைக்க தொடங்கியது. மிகவும் சரியாக 9.34 மணி அளவில் சூரியனை சந்திரன் மறைத்து வட்ட வடிவில் வளையம் தோன்றியது. சுமார் ஒரு நிமிடம் மட்டுமே இப்பகுதியில் நீடித்தது. அக்னி தீர்த்த கடற்கரையில் கூடி இருந்த மக்கள் அனைவரும் சூரியக் கண்ணாடி உதவியுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அரிய அறிவியல் நிகழ்வை ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்த்தனர். 9.34 மணிக்கு பிறகு படிப்படியாக சூரியனை விட்டு சந்திரன் விலகியது. இந்த அரிய நிகழ்வு சுமார் 3மணி நேரம் நீடித்தது. சரியா 11.10 மணிக்கு சந்திரன் முற்றிலும் மறைப்பதை விலகியது.

அதன் பின்னர், சூரியன் முற்றிலும் பிரகாசமாக மின்னியது. வானம் மிகவும் தெளிவாக இருந்ததால் இராமேசுவரம் பகுதியில் அனைவரும் வளைய சூரியக் கிரகணத்தை கண்டு ரசிக்க வாய்ப்பாக அமைந்தது. இதில் 500 மேற்ப்பட்ட உள்ளூர் வாசிகள் மற்றும் யாத்திரிகர்கள் சூரிய கிரகணம் கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிரகணத்தை கண்டு ரசிக்க சூரியக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும் வளைய சூரிய கிரகணம் பற்றிய விளக்கம் அழிப்பட்டது.

இதனை மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆசிரியர், இராமேஸ்வரம் வட்டார தலைவர் செந்தில் குமார் ஆசிரியர், செயலாளர் சசிகுமார் ஆசிரியர், துணை செயலாளர் ஜெரோம் ஆசிரியர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இப்பகுதியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்த ஏற்ப்பட்டால் சூரிய கிரகணத்தை அனைவரும் சூரியக் கண்ணாடி உதவியுடன் கண்டு ரசிக்க உதவியாக இருந்தது.

தகவல்:- தமிழ் நாடு அறிவியல் இயக்கம், இராமேஸ்வரம் கிளை இராமநாதபுரம் மாவட்டம்.

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!