ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் இயக்குனர் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு நாகராஜ் மண்வள அட்டை பயன்படுத்தி உரங்கள் இடுவது, மானியத்தில் உரங்கள் மற்றும் விதைகள் வாங்குவது குறித்து விளக்கம் அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் திருப்புல்லாணி செல்வம் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து விளக்கமளித்தார். தொடந்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவி சேதுவள்ளி துணைத்தலைவர் ராஜசேகர், முன்னோடி விவசாயி கனகவிஜயன் மற்றும் மாலங்குடி, புக்குளம் கிராம விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் ஸ்ரீ கிருபா மற்றும் திட்ட பணியாளர் இராமு ஆகியோர் செய்திருந்தனர்.

You must be logged in to post a comment.