சென்னை ஹஜ் இல்லத்தினை தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடத்தி வருவதாக திரிக்கப்பட்ட பொய்யான தகவல் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் பின்வரும் விளக்கம் அளித்துள்ளது.


பொய் : சென்னையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு புதிய ஹஜ் இல்லம் கட்டுவதாக முற்றிலும் தவறான தகவல் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை: சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவது இல்லை. தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி என்ற தனியார் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையம் அருகே நங்க நல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ள ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் கட்டப்படுகிறது.
வதந்திகளை நம்பாதீர்!


You must be logged in to post a comment.