தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு: S P முரளிரம்பா துவக்கி வைத்தார்..

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு (SOCIAL MEDIA CENTER) தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இன்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான சேவைகளில் சில நிகழ்வுகள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது சில நிகழ்வுகள் பொது மக்களின் கவனத்துக்கு வருவதில்லை. ஆகவே பெரும்பாலான பொது மக்கள் அறியவேண்டும் என்பதற்காக இந்த சமூக ஊடக பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவானது சார்பு ஆய்வாளர் சத்யநாராயணன் தலைமையில் காவலர்கள் முத்துமாரியப்பன், ரகுபதி மற்றும் அருண்ராஜ் ஆகியோரைக் கொண்டு செயல்படும். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரவு பகல் பாராமல் பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடும் காவல்துறையினரின் அரிய செயல்களை பொதுமக்களுக்கு வாட்ஸ் அப், முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாக இப்பிரிவினர் வெளிப்படுத்துவார்கள்

அதே போன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அந்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பொறுப்பில் whatsapp தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவார்கள். இப்பிரிவினர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய whatsapp குழுக்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் மொத்த தகவல்களை சேகரித்து வெளியிடுவார்கள்.

இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா தெரிவித்துள்ளார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!