எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
தேவகோட்டை முகமதியார் பட்டினம் பகுதியில் தனியார் மஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் அஸ்ரி சஹ்ரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் பாஸ்டர் மார்க், தமுமுக மாநிலத் தொண்டர் அணி இணை செயலாளர் ஷகிகுல் ஃபர்க்கி, நகர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், எஸ் டி பி ஐ மாவட்டத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், வார்டு உறுப்பினர் சேக் அப்துல்லா , நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்சய், மற்றும் பொதுமக்கள் திரளாக நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.