யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது!- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ  கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரான யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதோடு, அதற்கெதிராக தனது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) எஸ்.சி., எஸ்.டி  மற்றும் ஒபிசி பிரிவினருக்கான காலியிடங்களை குறைப்பதற்கும், போதுமான இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த காலி பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு  அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது; மட்டுமின்றி யுஜிசி யின் வழிகாட்டுதல் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அல்லது சீர்குலைக்கும் சில மறைமுகமான நோக்கங்களை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காலியிடங்களை இடஒதுக்கீடு அல்லாத பொது இடங்களாக மாற்ற பொதுவான தடை உள்ளது. ஆனால், அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், பொதுநலன் கருதி குரூப் ஏ பதவியை காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடத்தை நீக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்கலாம் என யுஜிசியின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வகையான தெளிவற்ற முன்மொழிவு, தகுதியற்றவர்கள் என்ற போர்வையில், இடஒதுக்கீடு பெற்றவர்களைத் தவிர்க்கும் மோசமான நடைமுறைக்கு வழிவகுக்கும். மேலும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான காலி இடங்களை, இடஒதுக்கீடு அல்லாத உயர்சாதியினரை கொண்டு நிரப்பவே வழிவகுக்கும். எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை குறைப்பதற்கு பதிலாக, எஸ்சி எஸ்டி  மற்றும் ஓபிசி -க்கான காலியிடங்களை நிரப்ப  தகுதி அடிப்படையில்  புதுமையான முறையை யுஜிசி ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!