எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்! – எஸ்.டி.பி.ஐ. கண்டனம் – தாக்குதலை ஏவிய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆத்தூர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் நாகை தெற்கு மாவட்ட தலைவர் ஃபைசல் ரஹ்மான் மீது குண்டர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
பைசல் ரஹ்மான் மீது, மே 17 அன்று மாலை 5 மணியளவில், திமுகவை சேர்ந்த மணல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்திர போஸால் ஏவிவிடப்பட்ட சுரேஷ், ராம்குமார், ராஜா, சுரேந்தர், பாலகிருஷ்ணன், அஜீத் ஆகிய குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பைசல் ரஹ்மானின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் அவரையும், அவரது குடும்பத்தினரையும் திட்டியதோடு, பைசல் ரஹ்மான் மீது கொலை வெறித்தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுரேந்திர போஸை எதிர்த்து போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வீடு தேடி வந்து கொலைவெறி தாக்குதல் நடத்த தூண்டிவிட்ட சுரேந்திர போஸை கைது செய்ய வேண்டிய காவல்துறை, பாதிப்புக்குள்ளான பைசல் ரஹ்மான் மீது பொய் வழக்கு புனைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆகவே, தமிழக அரசு கொலைவெறி தாக்குதல் நடத்த தூண்டிவிட்ட சுரேந்திர போஸ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், பைசல் ரஹ்மான் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









