எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலகக் கூட்டம் நேற்று (மார்ச்,06) புதுதில்லியில் உள்ள கட்சியின் தேசிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் முகமது ஷாபி தலைமை தாங்கினார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. இது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் தேசிய செயலக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை, என்ஐஏ, சிபிஐ, சிசிபி போன்ற புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எதிர்க் கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசியல் பழிவாங்கும் கருவியாக தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியின் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக அரசு ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்தை நசுக்குவதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் என தெரிவிக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்து பாஜகவின் கஜானாவை நிரப்பும் யோசனைதான் தேர்தல் பத்திரம். தேர்தல் பத்திரத்தை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அறிவித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாஜகவின் இந்த இருண்ட ஒப்பந்தத்தின் மோசமான வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது. இந்த வழக்கில் ஜூன் 30 ஆம் தேதி வரை தரவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு உச்சநீதிமன்றத்திற்கு எஸ்பிஐ வங்கி விடுத்த கோரிக்கை, பிஜேபி மற்றும் எஸ்பிஐ வங்கிக்கு இடையிலான (unholy nexus game planing) புனிதமற்ற உறவின் ஒரு பகுதியாகும். விரல் நுனியில் எதுவும் கிடைக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களை முட்டாளாக்கும் முயற்சி இது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









