பொதுமக்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவிக்கலாம்; சங்கரன்கோவில் ராஜா எம்எல்ஏ அறிக்கை..
பொதுமக்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை நேரிலோ அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் மூலமாகவோ சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா விடுத்துள்ள அறிக்கையில், இந்த நிதியாண்டிற்கான சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பகுதி கோரிக்கைகளை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9080404049 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும் என எம்எல்ஏ ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.