இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை இடையர்வலசை பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேனில் 100 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் உயிருடன் பிடிபட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் வேதாளை அருகே இடையர்வலசை பகுதியில் கடல் அட்டை உயருடன் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, அதனைத் தொடர்ந்து வனச்சரகர் சதீஸ், வனவர் குணசேகரன் மற்றும் வனத்துறைய சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர், அப்போது அதிவேகமாக வந்த TN – 65 – P7886 என்ற எண் கொண்ட ஆம்னி வேனை ஓட்டி வந்தவர்கள் வன துறையினரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு கடத்தல்காரர்கள் மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். ஆம்னி வேனை சோதனை செய்த வனத்துறையினர் அதில் இருந்து 100 கிலோ எடையிலான 5 பைகளிலும் கேன்களிலும் கடல் அட்டைகள் உயிரோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆம்னி வேன் மற்றும் கடல் அட்டைகளை பறிமுல் செய்து மண்டபம் வேதாளை வனத்துறை அலுவலகத் திற்கு கொண்டு சென்றனர். தப்பியோடிய நபர்களை பற்றிய விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












