1,800 கிலோ ரேஷன் அரிசி, 120 லிட்டர் பாமாயில் பறிமுதல்.. விசாரணை் தீவிரம்..

ராமநாதபுரம், ஆக.4 – ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் கோகிலா தலைமையில் வருவாய் துறையினர் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக  (03/98/2023) நேற்றிரவு 7:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த தகவல்படி ஆர்.எஸ்.மங்கலம் சிலுகைவயல் மேல் கரை ஊரணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ வீதம் 36 மூடைகளில் இருந்த ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 120 லிட்டர் பாமாயில் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி அருகே மேல பெருங்கரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பாலமுருகனை (27) கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!