கடந்த மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த 14 வழிச்சாலை ஒரு மழைக்கே தாங்காமல் சேதமடைந்ததுள்ளது. சுமார் 11 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்பதி அடைந்துள்ளனர். மேலும் இந்த சாலை கட்டமைப்பில் பெரிய அளவில் ஊழல் இருக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.
இச்சாலை 11 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட டில்லி – மீரட்டை இணைக்கும் 14 வழி அதி நவீன சாலையை கடந்த மே மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். டில்லியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், தேசிய தலைநகர் பகுதிக்கான போக்குவரத்து வசதியை அதிகரிக்கவும் இந்த சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் கிரின் சாலையாக கருதப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில் இடையில் எங்கே இருந்தும் உள்நுழைய முடியாமல் சரியாக என்ட்ரி எக்ஸிட் வழியாக மட்டும் பணிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 4 பெரிய பாலங்கள், 46 சிறிய பாலங்கள், 3 மேம்பாலங்கள், 7 பாதை மாற்றும் பாலங்கள், 221 கீழ் மட்ட பாலங்கள், 8 சாலை மேம்பாலங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் அவன் செயல்..??


You must be logged in to post a comment.