இராமநாதபுரம் தியேட்டரில் வசந்த மாளிகை காண வந்தோருக்கு சிவாஜி ரசிகர்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு

பழைய திரைப்படங்களின் கதை, கதாபாத்திரத்துடன் ஒன்றிய நடிப்பு, கருத்தாழம் மிக்க பாடல்கள், நகைச்சுவை என அத்தனை அம்சங்களை கொண்டிருக்கும். சிறந்த கதை அம்சத்திற்காக ஒவ்வொரு படத்தையும்தனக்கு பிடித்த நடிகர்களின் படங்களை திரும்பத், திரும்ப பார்க்கும் பழக்கம் உண்டாகி காலப்போக்கில் அந்த நடிகரின் ரசிகர்களாக மாறினர். எம்.கே.தியாகராஜ பாகவதர், ஜீவரத்தினம், பி.யு.சின்னப்பா, கம்பீரக்குரல் டி.கே.மகாலிங்கம் இவர்களின் கலை உலக கால கட்டத்தில் புரட்சி நடிகர் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் யுகம் தொடங்கியது. இவர்கள் வந்த பிறகு தான் ரசிகர் கூட்டம் அதிகரித்தது. எம்ஜிஆர், சிவாஜி க்கு பாடல் பாடுவதில் ரகம் பிரித்து அவர்கள் பாடுவது போன்று பிரம்பிப்பை டிஎம் சவுந்தரராஜன் ஏற்படுத்திய பட வரிசைகள் ஏராளம். தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த வ.உ.சி., (கப்பலோட்டிய தமிழன்) பாரதியார் (கை கொடுத்த தெய்வம்) வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன் (ராஜபார்ட் ரங்கதுரை) உள்ளிட்ட பலரை நம்மிடையே இன்று வரை சிவாஜி கணேசன் நடிப்பாற்றலே நினைவுக்கு வருகிறது. அது மட்டுமல்ல வீர வசனம் பேசுவதிலும், காதல் காட்சிகளில் தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தியதில் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். அண்ணன், தங்கை பாசத்திற்கு பாசமலர், எதிரும் புதிருமான தந்தை, மகன் நடிப்பிற்கு தங்க பதக்கம், காதல் வெளிப்பாட்டிற்கு வசந்த மாளிகை என அடுக்கி கொண்டே போகலாம். கே.பி.பிரகஷ் ராவ் இயக்கத்தில், கவியரசு கண்ணதாசன் பாடல்களில், கே.வி.மகாதேவன் இசையில் கடந்த 47 ஆண்டுகளுக்கு முன் வந்த காதல் ஓவியம். அன்றைய ரசிகர்களை மட்டுமல்ல இன்று 50 வயதை கடந்த பலர் வசந்த மாளிகை பாடல்களை முனு, முனுக்காதவர்கள் இல்லை எனலாம். ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து வசந்த மாளிகை திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி வெளியிட்டது. இத்திரைப்படம் ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டரில் இன்று திரையிடப்பட்டது. இப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு ரசிகர் மன்ற தலைவர்என். பால்ராஜ், மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற மூத்த தலைவர் என்.தேவதாஸ், நகர் தலைவர்கள் என். செல்வம் (ராமேஸ்வரம் ) ஆர்.சீனிவாசன் (பாம்பன்), டி.மனோகரன் (ராமநாதபுரம் ) ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!