சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு..
சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வனத்துறை நெல்லை வன உயிரின சரணாலயம், சிவகிரி வனச்சரகம் சார்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர். R. முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் செல்வி. இரா. மௌனிகா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியில், சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன் மற்றும் தலைமை ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விஸ்வநாதப்பேரி கிராமம் ஆகிய இடங்களில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த கலை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









