சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமம் உள்ளது. இங்கு இராமயணகால சரித்திர புகழ் வாய்ந்த ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பழங்காலம் தொட்டேதேரோட்டத்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் காப்புக்கட்டி 9நாள் திருவிழா நடைபெறும். காப்புக்கட்டிய நாள் முதல் தினமும் மண்டகப்படி நடக்கும். 8ம் திருநாள் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் திருத்தேரோட்டம் நடைபெறும். உஞ்சணை, செம்பொன்மாரி,கண்ணனை அணைய தென்னிலை, இறகுசேரி என நான்கு நாடுகள் என்றழைக்கப்படும் கிராம பொதுமக்கள் தேரினை வடம்பிடித்து இழுப்பார்கள்

You must be logged in to post a comment.