சிவகங்கையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 13 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை..

சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரணை..

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன் செக்கியூரட்டி அடைக்கலராஜ் ஆகியோர் காரில் சோதனை மேற்கொண்டதில் 13 லட்சம் ரூபாய் பணம் ( 500 x 2600) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ATM இயந்திரத்தில் வைப்பதற்கு கொண்டு சென்றதாக கூறியும், உரிய ஆவணங்கள் கொண்டு வரப்படவில்லை. இதனால் 13 லட்சம் பணத்தை கைப்பற்றி சிவகங்கை கருவுலகத்தில் 13 லட்சம் பணத்தை வட்டாட்சியர் மைலாவதி ஒப்படைத்தார். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைப்பதற்கு தனியார் நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணங்கள் என்று கொண்டு வந்ததால் தேர்தல் விதிமுறைப்படி கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. காவலர்கள் முருகேசன், கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!