சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இயற்கை விவசாயம் குறித்த தொழில் நுட்பபயிற்சி பேராசிரியரும் மண்ணியல்துறை விஞ்ஞானி டி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
27 நாட்கள் நடைபெறும் விவசாய தொழில்நுட்ப பயிற்சியில் பிரதான் மந்திரி விவசாய தொழில்நுட்ப பயிற்சியில் மண்ணை வளப்படுத்துதல் பலவிதமான இடுப்பொருட்கள் தயாரித்தல் அமிர்த கரைசல் பஞ்ச காவியம் ஜீவாமிர்தம் தேமூர் கரைசல் போன்றவற்றை தயாரிக்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு பயிரிட வேண்டுவென குறித்து பயிற்றுனர் விவசாயிகளை வைத்து விஞ்ஞானிகள் பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 25 பேருக்கு 6 கிலோ விதம் 150 கிலோ கருப்பு கவுனி விதை நெல் வழங்கப்பட்டு எவ்வாறு பயிரிடப்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் பாரம்பரிய விவசாய முறைகளை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
You must be logged in to post a comment.