சீர்காழி அருகே கொரோனா ஊரடங்கை வென்று சொட்டுநீர் பாசனம் மூலம் மகசூல் பெற்ற இயற்கை விவசாயி தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த இளயமதுகூடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா விவசாயி. இவர் இயற்க்கை விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு விவசாயம் செய்து வருகிறார் வறட்சி பகுதி என்பதால் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யபடுவதால் நீரை சேமிக்க கால விரையம் மற்றும் பண விரையத்தை தடுக்க மாற்று வழிதேடி சீர்காழி அரசு தோட்டக்கலை துறை அலுவலகத்தை நாடினார். அப்போது அதிகாரிகள் மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்தும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர். உடனே தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பை நிறுவினார் செல்லப்பா, அதன்படி கடந்த மாதம் தோட்டக்கலை துறை மூலம் அவரது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவபட்டது. மூன்று மாத கால பயிறான வெண்டகாய், கத்திரிகாய், புடலங்காய், பீர்கங்காய், அவரை, பாகற்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு அறுவடை பருவத்தை எட்டியதுடன் நல்ல மகசூலையும் கொடுத்துள்ளது. இதுவரை ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் செலவு செய்தும் தற்போது 15ஆயிரம் செலவு குறைந்துள்ளதாகவும் மகசூல் இந்தாண்டு அதிக லாபம் கிடைத்ததாகவும் மகிச்சியோடு தெரிவித்தார் விவசாயி. சொட்டு நீர் பாசனம் மூலம் கடும் வறட்சி, தண்ணீர் சிக்கனம், உரங்கள் இடும் நேரம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை என அனைத்து தடைகளையும் தாண்டி நல்ல மகசூல் பெறமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சுற்றியுள்ள வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக மகசூலையும் பெற்று சாதித்த விவசாயை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பொன்னி, உதவி அலுவலர் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விவசாயி செல்லப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!