SIR – விரிவான விளக்க கூட்டம்..

இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டிச.12 அன்று நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து விரிவாக விளக்கினார். திருத்தப் பணிகள் துல்லியமாகவும், சீராகவும் நடைபெறும் வகையில் அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தக் காலத்தில், இப்பணியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், சிக்கல்களுக்கு தீர்வு காணவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், தங்கள் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது மூன்று முறை பார்வையிட வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப் பட்டது.

 

செய்தி வெளியீடு: அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!