தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்!-தேர்தல் ஆணையம்..

தமிழகத்தில் 98.23% சதவீதம் (6,29,79,208 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் வெள்ளிக்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

டிச.4-ஆம் தேதி நிறைவடைய வேண்டிய இந்தப் பணி டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) நிலவரப்படி 6,39,95,854 (99.81%) வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், இதில் 6,29,79,208 (98.23%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் விநியோகிக்கப்பட்ட 10,20,815 (99.93) கணக்கீட்டு படிவங்களில் 10,11,921 (99.05%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!