தவ்ஹீத் ஜமாத் சார்பில் S.I.R விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் திருத்த நடைமுறைகள் SIR குறித்த கருத்தரங்க கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் கடையநல்லூர் தவ்ஹீத் நகர் மர்கஸ் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் SIR-ன் நடைமுறைகள் குறித்தும் அதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பின்வருமாறு எடுத்துரைத்தார்.

 

SIR படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்து விடக்கூடாது, சமீபத்தில் பீகாரில் சுமார் 45 லட்சம் மக்களின் வாக்குரிமை பறிபோனது மட்டுமல்லாமல் அவர்களின் குடியுரிமையும் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது என்றும், தற்போது 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த SIR நடைமுறைகள் தமிழகத்திலும் வீரியம் அடைந்துள்ளது. நிர்வாகிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகள் மூலம் முகாம்கள் அமைத்து எந்த ஒரு வாக்காளரின் வாக்குரிமையும் விடுபடாத அளவில் விழிப்புணர்வோடு இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவிகள் செய்திட வேண்டும் என்று கூறினார்.

அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ வலை தளங்களில் விண்ணப்ப படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு வாக்குரிமையை பாதுகாத்திட வேண்டும் என்றும், பிப்ரவரி 2026 இல் முழுமையான வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைவரின் வாக்குரிமையும் பெற்றிடும் வகையில் உழைத்திட வேண்டும் என்றும் கூறினார். கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு SIR குறித்தான காணொளி (Video) யுடன் படிவம் குறித்தான விளக்கத்துடன அனைத்து வகையிலான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

 

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தை (SIR)-ஐ குறைந்த கால அவகாசத்தில் முன்னெடுப்பதால் அனைத்து கிளை நிர்வாகிகளும் மக்களுக்கு உதவும் வகையில் வீரியமாக களப்பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த கருத்தரங்க கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் பாஸித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், பீர் முகம்மது, அப்துல் பாசித், முஹமதலி பிலால், செய்யதலி, மாணவரணி ரபீக் ராஜா மருத்துவ அணி அப்துல்லாஹ் வர்த்தக அணி இனாமுல் ஹக்  தொண்டரணி சேக் தாவூத் ஆகியோருடன் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் முன் களப்பணியாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!