பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும்.
இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த திட்டத்துக்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் நாளை தொடங்கப்படவுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டத்தை நாளை பல்லவனிடம் பணிமனையில் துவக்கி வைக்கிறார்.
முதற்கட்டமாக, மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை , இனி மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மின்சார ரயில்கள் ,விரைவு ரயில்கள், சாப்பிட மற்ற போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment.