தமிழக அரசின் சார்பில் சிங்கப்பூர்  சுற்றுலா: சடையனோடை அரசு பள்ளி மாணவி பவித்ரா சிறப்பு பேட்டி..

திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவி  பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடத்தில் , சென்னையில் மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். வெற்றி  பெற்ற  மாணவியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.கவிதா மாணவியின் பெற்றோர் ரமேஷ் அலமேலு ஆகியோர் மாணவிகளை லட்சுமிபிரபா, ரேஷ்மா, பவித்ரா ஆகியோர் சிங்கப்பூருக்கு சுற்றுலா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யா மலை மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் சென்றனர்

தமிழக அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்று வந்த திருவண்ணாமலை ஒன்றியம் சடையனோடை அரசுப் பள்ளி மாணவி பவித்ரா சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் சொந்த ஊருக்கு திரும்பிய போது சடையனோடை ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஜெயந்தி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மாணவியின் பெற்றோர்கள் ரமேஷ் அலமேலு ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் வரவேற்றனர்.

பின்னர் சிங்கப்பூர் கல்வி சுற்றுலா குறித்து பவித்ரா மாணவி “கீழை நியூஸ் “சிறப்பு பேட்டி அளித்தார்

 அவர் பேசுகையில்:

அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட திறன் சார்ந்தப் பாேட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் வெற்றிப் பெற்றோம். இதன் மூலம் சிங்கப்பூர் நாட்டிக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தோம். விமானம் தலைக்கு மேலே செல்வதை மட்டுமே நாங்கள் பார்த்து இருந்தோம்.

முதல் முறையாக விமானத்தை தொட்டு பார்த்ததோடு மட்டுமல்லாமல், அதில் பயணமும் செய்துள்ளோம். கலாசாரம், தூய்மையான சிங்கப்பூர், கட்டுப்பாடான விதிமுறைகள், அதனை கடைபிடிக்கும் மக்கள் என பல்வேறு விஷயங்களை பார்த்தோம். அதுபோன்ற நடைமுறை இந்தியாவிலும் வர வேண்டும். மேலும் அந்த நாட்டில் சென்று படிக்க வேண்டும் என தோன்றுகிறது, அதற்காக தயார் செய்துக் கொள்ள விரும்புகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது போல சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் எங்களை நன்றாக கவணித்து கொண்டனர். அங்குள்ள தமிழ் கலைஞர்கள் என அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுடைய கனவை மேலும் பெரிதாக மாற்றியுள்ளது இந்த சுற்றுலா பயணம்.

பொருளாதார சூழ்நிலைகளால் எங்களால் வேறு ஊருக்கே பயணம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இப்போது தமிழக அரசால் நாங்கள் விமானத்தில் சென்றுள்ளோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. ஊக்கம் அளித்த எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் எனது பெற்றோர்களுக்கும் நன்றி

மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எங்களோடு நண்பராக மிக நன்றாக பழகியதோடு, பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது தங்களுடன் சாவரி செய்தார். மேலும் அங்கு உள்ள நூலகத்திலும் கலந்துரையாடினார்” என  தெரிவித்தனர். இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட கல்வி துறை அதிகாரிகள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!