தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நதிகள் அறக்கட்டளை மற்றும் JETLEE BOOK OF WORLD RECORD இணைந்து மாபெரும் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 40 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 50பேர் சிலம்ப பயிற்சியாளர் மாஸ்டர் முகம்மது அசன் தலைமையில் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்நிகழ்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

