தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் சங்கச் செயலாளர் நவாஸ் கான், துணைத்தலைவர் சுலைமான், ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், கவுன்சிலர் மணிகண்டன், சங்க உதவியாளர் காதர் மைதீன், ஆசிரியர் இசக்கிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் பாக்யராஜ் வரவேற்றார்.

பாளை சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் இசக்கி பாண்டியன், துணை பேராசிரியர் அந்தோணித்துரைச்சி உள்ளிட்ட மருத்துவ குழுவினர், 182 பயனாளிகளுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் அர்ச்சனா தலைமையில் 82 நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் நன்றி கூறினார். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் அனைவருக்கும் மருந்துகள், தைலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 5 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு நபர்கள் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.