தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை டாக்டர் மணிமேகலை வரவேற்புரை வழங்கினார். மேலும் சித்தமருத்துவ டாக்டர் கலை வாணி மற்றும் டாக்டர்கள் பாலசுப்பிரமணி சக்தி தமிழரசன், இயற்கை காப்போம் அறக்கட்டளை சிவசக்தி கிரி வாசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மணிமேகலை பேசியபோது , “15 வகையான மூலிகை செடிகளையும் நோயை குணப்படுத்தும் நவதானியங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது சாகாவரம் பெற்ற சித்தர் மகான்கள் தோற்றுவிக்கப்பட்ட இயற்கை மருத்துவம் சித்த மருத்துவத்தின் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்து நோயில்லா உலகத்தை உருவாக்கி நம் தமிழரின் மாண்பினையும் தமிழ் மருத்துவத்தின் சிறப்பையும் உலகறிய செய்யும் பகவான் ஸ்ரீ அகத்திய மாமுனிவர் வணங்கி தமிழாசி பெறவேண்டும்” என்று பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
செய்தி: சிங்காரவேலு, தர்மபுரி



You must be logged in to post a comment.