சித்த மருத்துவ கண்காட்சி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்…

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைää தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 2வது தேசிய சித்த மருத்துவ தினம் மற்றும் சித்த மருத்துவத்தின் மகிமை குறித்து சித்த மருத்துவ கண்காட்சி இன்று (26.12.2018) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முரளி, இ.கா.ப தலைமையில் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது..

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், சித்த மருத்துவ தொன்மை பற்றியும், சித்த மருத்துவ தந்தை அகத்திய மாமுனிவர் பற்றியும், தென் தமிழகத்தின் மூலிகை வளம் பற்றியும், இராமயணத்தை மேற்கோள் காட்டியும்ää இன்றைய தினசரி பயன்பாட்டில் வேம்பு உட்பட மூலிகை பயன்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும் பேருரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு. இராஜசெல்வி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குனர் சுகாதார மரு. பரிதா ஷெரீன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை துணை உறைவிட மருத்துவர் மரு.பால்பாண்டியன், ஒட்டநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. தங்கமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொதுமக்கள் அனைவரையும் மரு. ரதியா செல்வம் அவர்கள் வரவேற்றார்கள்.

தூத்துக்குடி அரசு மாவட்ட சித்த மருத்துவர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சித்த மருத்துவர்கள் இந்த மருத்துவத்தின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து உலகிற்கே எடுத்துரைக்வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். கண்காட்சியில் யானை மீசை, விஷநாராயண போன்ற 100க்கும் அதிகமான அரியவகை மூலிகைகள், அதன் அறிவியல் பெயர்கள், பயன்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பாரம்பரிய உணவு வகைகளான பிரண்டைத்துவையல், உளுந்தங்களி, வாழைப்பழ வடை போன்ற பல வகை உணவு வகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சித்தமருத்துவத்தின் மகளிர் மற்றும் குழந்தை நலன் சார்ந்த காட்சி விளக்கப்படங்கள், மருந்துகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் போன்றவை பற்றி விளக்கப்பட்டிருந்தன. சித்த மருத்துவத்தின் சிறப்பான புற மருத்துவ முறைகள் பற்றி விளக்கப்படங்கள் மருந்துகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சித்த மருத்துவத்தின் வாழ்வியல் சார்ந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றிய பதாகைகள் மற்றும் குறிப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்திகள்:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!