18-58 வயது உள்ளவரா! குர்ஆன் ஓத ஆசையா! குறுகிய காலத்தில் ஓர் அரிய வாய்ப்பு!!

18-58 வயது உள்ளவரா! குர்ஆன் ஓத ஆசையா! குறுகிய காலத்தில் ஓர் அரிய வாய்ப்பு!!

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் மௌலானா, மௌலவி, அமீர் தங்கள் பாக்கவி ஹஜ்ரத் என்பவர் தான் இப்படி ஓர் அதிசய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அவரை நமது சத்திய பாதை மற்றும் கீழை நியூஸ் அழைத்து பேசியது;

அப்பொழுது ஹஜ்ரத் அவர்கள் கூறியதாவது;

குர்ஆன் ஓத ஆசை உள்ளவர்கள் 18வயது முதல் 58வயது வரை உள்ள நபர்கள் யாராக இருப்பினும் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் நன்றாக சரளமாக ஓத கற்றுத் தரப்படும்.

இதற்காகவே பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன் பல்வேறு மதரஸாக்களில் பங்கேற்று இதற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறி வருகிறேன்.

வயது வித்தியாசம் இன்றி எத்தனையோ பேர் குர்ஆன் கல்வியை கற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே போன்று நன்கு கற்றறிந்த ஆலிம்களுக்கும் இதன் நுணுக்கங்களை 5 மணி நேரத்தில் பாடம் எடுத்து அவர்களுக்கும் இதன் இரகசியங்களை எடுத்துக் கூறி வருகிறேன்.

எனது நோக்கம் இனி யாரும் எனக்கு குர்ஆன் ஓத தெரியாது என்று கூற கூடாது என்று கூறினார்.

இவருடைய சேவைகள் சம்பந்தமாக நாமும் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில்;

இவரிடம் பல்வேறு, பலதரப்பட்ட நபர்கள் அவர்களின் இடத்திற்கு அழைத்துச் சென்று இவர்களை தங்க வைத்து ஆசையோடு குர்ஆன் கற்று வருகின்றனராம்.

குறுகிய காலத்தில் மிகத்தெளிவாக குர்ஆன் கற்று தரும் இவரின் திறமையை பாராட்டி இவரிடம் படித்த பலரும் சந்தோஷம் அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

தொடர்பு எண்:

மொலானா, மௌலவி, அல்ஹாஜ், அமீர்தங்கள் பாக்கவி!!

9865160095/ 6380815261

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!