குறும்படம் மூலமாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் கீழக்கரை இளைஞர்கள்..

நவீன உலகத்தில் விஞ்ஞான வளர்ந்தும் வரும் அதே வேளையில் இளைய சமுதாயம் தவறான வழியில் சென்று வாழ்கை தடம் புரள்வதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் பெருகிய வண்ணமே உள்ளது.  இன்றைய சமுதாயம் விளையாட்டு, கேளிக்கை என்று சுற்றி வரும் இந்த காலகட்டத்தில் கீழக்கரையைச் சார்ந்த முஸ்தஃபா, மாலிக், முர்ஷல் மற்றும் காசிம் என்ற நான்கு இளைஞர்கள் விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய சமுதாயம் எவ்வாறு தடம் புரள்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக TRUTH MISSING என்ற குறும்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.  அதன் முன்னோட்டத்தை  (கீழே உள்ள வீடியோ) இன்று (09-01-2018)  YOUTUBE தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த இளைஞர்களின் முயற்சி வெற்றியடைய கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!