ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து கட்டிடத்துக்கும் மற்றும் குடோன்க்கும் வாடகைக்கு 18/- சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆர்சிஎம்/ எப்சிஎம் முறையில் விதித்து அதைக் கட்ட அறிவித்துள்ளது. அனைத்து வணியர்களுக்கும் சுமையை ஏற்படுத்தும் இந்த உத்தரவை ரத்து செய்யவும். இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்து ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் சங்கம் சார்பாக தலைவர் ஜவஹர் தலைமையில் நடைபெறுகிறது. உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை பஜார் பேரையூர் ரோடு மதுரை ரோடு தேனி ரோடு வத்தலகுண்டு ரோடு ஆகிய பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மற்றும் தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் கடை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.