இராமநாதபுரம் : இராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடை, 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியது. இதனை வனத்துறையினர் கைப்பற்றி உடற்சுறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடற் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடலவாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் பாம்பன் தெற்கு வாடி கடற்கரையில் ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியதாக வனத் துறையினருக்க மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் வனத்துறையினர் தெற்கு வாடி கடற்கரை சென்று அங்கு இறந்து கிடந்த 18 அடி நீளம், 2 டன் எடை கொண்ட அரிய வகை நீல நிற ராட்சத திமிங்கலத்தை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். இறந்த திமிங்கலத்தை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
நீல திமிங்கலம் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது. இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய நீலத்திமிங்கலம் குட்டியாக இருக்கலாம். , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் பாறை இடுக்கில் மோதி காயம்பட்டு இறந்து அலைகளால் உடல் இழுந்து வந்து பாம்பன் தென் கடற்கரையில் ஒதுங்கியதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிவில் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காண அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









