சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் “கீழை பதிப்பகம்” புத்தகங்கள் அறிமுகம்…

சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இன்று (09/10/2018) “கீழை பதிப்பகம்” சமீபத்தில் வெளியிட்ட “ஆன்மீக அரசியல்” மற்றும் “காயம்பட்ட காலங்கள்” ஆகிய புத்தகங்களை பிரபல எழுத்தாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கீழை பதிப்பகத்தின் புத்தகத்தை எழுத்தாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் அ.முத்துகிருஷ்ணன், திரையுலக இயக்குனர் மற்றும் ரௌத்திர பேச்சாளர் கரு.பழனியப்பன், உணவுலகம் மற்றும் கிச்சன் மாத இதழ் ஆசிரியர் ராம.மெய்யப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் நிர்வாக இயக்குனர் வேடியப்பன், வாழ்வின் சுவையை சிந்திக்க தூண்டும் “என்னை தேடி” புத்தகத்தின் இளம் எழுத்தாளர் நசீமா ரசாக் ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் இன்னும் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த வாசகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு கீழை பதிப்பகத்தின் புத்தகங்கள், கீழைநியூஸ் மற்றும் பூதக்கண்ணாடி மாத இதழ் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!