மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஷேர் ஆட்டோ தொல்லை..

மதுரை நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாகவும் நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்துவதுமாக இருப்பதால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது.  இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு சில சமயங்களில் காயங்களும், பல நேரங்களில் உயிரிழப்பும் ஷேர் ஆட்டோக்களின் கவனக்குறைவினால் ஏற்படுகிறது.

அதே போல் பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களாகிய ரயில் நிலையம், பஸ் நிறுத்தம் போன்ற பகுதிகளிலும் வாகனங்களுக்கு வழி விடாமல் தொல்லை தருவது அன்றாட நிகழ்வாக காணலாம். இதனால் அரசு வாகன ஓட்டுனர்களுக்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களும் சாலையை மறித்து மோதல்களில் ஈடுபடும் செயல்களையும் காண முடியும்.  இதனால் பாதிக்கப்படுவது பொது மக்களே, ஆகையால் அரசு அதிகாரிகள் இந்த விசயத்தில் தலையிட்டு, ஷேர் ஆட்டோக்களின் செயல்பாடுகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!