கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18 ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு பேச்சாளர் ஆந்திரேயா பெண்கள் மேல்நிலை பள்ளி தாளளர் வழக்கறிஞர் மனோகரன் மார்டின் உரையாற்றினார், அவர் “ நான் அப்துல் கலாம் படித்த பள்ளியில் படித்தேன், நீங்கள் அன்னப்பறவை போல் வாழ வேண்டும் நல்லதை எடுத்து கொண்டு தீயவையை நீக்க வேண்டும் தாய் தந்தை பெரியவர் ஆசிரியர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார். பின்னர் சிறப்பு அழைப்பாளர் கூடுதல் சூப்பிரண்டண்ட் ஆப் போலிஸ் வெள்ளத்துறை சிறப்புரையாற்றினார் இந்தியாவை வல்லரசாக நிலைநாட்டுவது கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் தான் தாய் தந்தையரை வணங்க வேண்டும் இறைவனுக்கு மேல் ஆசிரியரை மதிக்க வேண்டும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடைமுறையையும் பொது அறிவையும் கற்று கொடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் அரபி கல்வி துறை அபுதாகிர் கீராத் ஒதினார், வணிகத்துறையை சார்ந்த பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார் கல்லூரி முதல்வர் ரஜபுதின் ஆண்டறிக்கை வாசித்தர், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகம்மது ஜஹுபர், முதல்வர் அப்பாஸ் முகைதீன், முதல்வர் அலாவுதீன் விழா பேருரையாற்றினார். வேதியியல் துறை தலைவர் அப்துல் சர்த்தார் நன்றியுரையாற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!